ஜவ்வு மிட்டாய் தேவலை என்று சொல்லத் தோணுகிறது நயன், பிரபுதேவாவின் விவகாரம். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேற முடிவு செய்துள்ளனர் என்றும் இதற்காக அங்கு வீடு பார்க்கிறார்கள் என்றும் ஏற்கெனவே செய்திகள் வந்தன. பின்னர் இந்திப்படங்கள் இயக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் மும்பையிலேயே தங்கி விட யோசனை உள்ளது என்று பிரபுதேவா கூறினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நயன்தாராவும், பிரபுதேவாவும் நடனப் பள்ளிக்கு இடம் பார்ப்பதற்காக ரகசியமாக துபாய் சென்று திரும்பிய தகவல் வெளியானது. அங்குள்ள பிரபல புரோக்கர்கள் மூலம் இடத்தை அலசியுள்ளனர். இடம் தேர்வு செய்வதற்காக சில நாட்கள் துபாயிலேயே தங்கி இருந்தார்கள். புரோக்கர்கள் காட்டிய இடங்களை வீதி வீதியாக காரில் சென்று சுற்றி பார்த்துள்ளனர். காலி இடம், கட்டிடத்தோடு கூடிய இடம் போன்றவற்றையும் பார்த்து இருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட இடங்களைப் பார்த்து ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளார்களாம். வீட்டுடன் கூடிய பிரமாண்ட நடனப் பள்ளியை கட்டத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இருவரும் துபாயில் குடியேறத் திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ள நிலையில்... முதல் மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து சுற்றுவதற்கும் தடை கோரியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நயன் தத்துவ எஸ்.எம்.எஸ்.களை தனக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரிய ஒரு சில திரையுலக நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார். லேட்டஸ்ட்டாக வந்த தத்துவம் இது. 'ஐ லவ் யூ, இது கேள்வியல்ல. ஆனால் பதிலை எதிர்பார்க்கும்'. கடந்த சில வாரங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருக்கிறார் அவர். அதனால்தான் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இப்படி மெசேஜ்களை அனுப்பி வருகிறார் என்கிறது அவரைத் தொடர்ந்து கவனித்து வரும் ஃபிரண்ட்ஷிப் வட்டாரம். தனது காதல் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர், கோர்ட் வழக்கு என்றானதும் 'உங்களுக்கு ஏப்ரல் வரைக்கும் டைம், அதுக்குள்ளே இந்த பிரச்சினை தீரலைன்னா அவங்கவங்க வழிய அவங்கவங்க பார்க்கறதுதான் நல்லது' என்று பிரபுதேவாவிடம் சொன்னாராம் நயன். இப்படி ஒரு அதிரடி முடிவை எதிர்பார்க்காத நடனப்புயல் கண்கலங்கி நிற்கிறாராம். இழுத்துக்கோ... பறிச்சுக்கோனு இல்லாம ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தா சரி!
No comments:
Post a Comment