Latest Updates News | Hot News | Sports News

Showing posts with label nayanthara and prabhudeva. Show all posts
Showing posts with label nayanthara and prabhudeva. Show all posts

15 April 2011

பிரபுதேவா நயந்தாராவுக்கு நடுவில் ஹன்சிகா…?

நடிகர் பிரபுதேவா – நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி – பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது. 
பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் எங்கேயும் காதல் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். இப்ப‌டத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு கிளம்பியது. அதனை வழக்கம்போலவே ஹன்சிகா மறுத்தார்; பிரபுதேவா மவுனம் காத்தார். இப்போது சூட்டிங் முடிந்து ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் மீண்டும் கிசுகிசு கிளம்பியுள்ளது.

சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்). ஆனால் ‌‌கோலிவுட்டில் ‌தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார். அம்மணி அளித்துள்ள பேட்டியில், “எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை. பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார்.

10 January 2011

நயன்தாராவுக்கு சென்னையில் திருமணம்


நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுதேவாவுக்கும் அவரது முதல் மனைவியான ரம்லத்துக்கும் எதிர்வரம் ஜூன் மாதன் பரஸ்பர விவாகரத்து வழங்கப்படவுள்ள நிலையிலேயே விவாகரத்து கிடைத்த அடுத்த வாரமே இந்தத் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருமணத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு செல்லச் சண்டையே நடந்ததாம்.

இந்த சென்னையே வேண்டாம். ஹைதராபாத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என பிரபுதேவா சொன்னாராம். ஆனால், ஒரு காலத்தில் தன்னால் சுதந்திரமாக வரமுடியாமல் போன இதே சென்னையில்தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் நயன்தாரா.

அவரது ஆசைக்கு மதிப்பளித்து, தனது ஹைதராபாத் மோகத்தை விட்டுக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. ஹைதராபாதில் தனியாக திருமண வரவேற்பு நடத்த உள்ளதாம் இந்த காதல் ஜோடி.

13 October 2010

நயன் வைத்த கெடுவால் கலங்கிய பிரபுதேவா!

ஜவ்வு மிட்டாய் தேவலை என்று சொல்லத் தோணுகிறது நயன், பிரபுதேவாவின் விவகாரம். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேற முடிவு செய்துள்ளனர் என்றும் இதற்காக அங்கு வீடு பார்க்கிறார்கள் என்றும் ஏற்கெனவே செய்திகள் வந்தன. பின்னர் இந்திப்படங்கள் இயக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் மும்பையிலேயே தங்கி விட யோசனை உள்ளது என்று பிரபுதேவா கூறினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நயன்தாராவும், பிரபுதேவாவும் நடனப் பள்ளிக்கு இடம் பார்ப்பதற்காக ரகசியமாக துபாய் சென்று திரும்பிய தகவல் வெளியானது. அங்குள்ள பிரபல புரோக்கர்கள் மூலம் இடத்தை அலசியுள்ளனர். இடம் தேர்வு செய்வதற்காக சில நாட்கள் துபாயிலேயே தங்கி இருந்தார்கள். புரோக்கர்கள் காட்டிய இடங்களை வீதி வீதியாக காரில் சென்று சுற்றி பார்த்துள்ளனர். காலி இடம், கட்டிடத்தோடு கூடிய இடம் போன்றவற்றையும் பார்த்து இருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட இடங்களைப் பார்த்து ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளார்களாம். வீட்டுடன் கூடிய பிரமாண்ட நடனப் பள்ளியை கட்டத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இருவரும் துபாயில் குடியேறத் திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ள நிலையில்... முதல் மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து சுற்றுவதற்கும் தடை கோரியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நயன் தத்துவ எஸ்.எம்.எஸ்.களை தனக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரிய ஒரு சில திரையுலக நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார். லேட்டஸ்ட்டாக வந்த தத்துவம் இது. 'ஐ லவ் யூ, இது கேள்வியல்ல. ஆனால் பதிலை எதிர்பார்க்கும்'. கடந்த சில வாரங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருக்கிறார் அவர். அதனால்தான் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இப்படி மெசேஜ்களை அனுப்பி வருகிறார் என்கிறது அவரைத் தொடர்ந்து கவனித்து வரும் ஃபிரண்ட்ஷிப் வட்டாரம். தனது காதல் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர், கோர்ட் வழக்கு என்றானதும் 'உங்களுக்கு ஏப்ரல் வரைக்கும் டைம், அதுக்குள்ளே இந்த பிரச்சினை தீரலைன்னா அவங்கவங்க வழிய அவங்கவங்க பார்க்கறதுதான் நல்லது' என்று பிரபுதேவாவிடம் சொன்னாராம் நயன். இப்படி ஒரு அதிரடி முடிவை எதிர்பார்க்காத நடனப்புயல் கண்கலங்கி நிற்கிறாராம். இழுத்துக்கோ... பறிச்சுக்கோனு இல்லாம ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தா சரி!