திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- கோவில் நடை அடைப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூரில்
சுப்ரமணியசாமி கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து
விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை
அடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது.
அறுபடை முருகன் கோவிலில் இரண்டாம்
படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது
திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த
கோவிலுக்கு தினசரியும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம்
செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான
பக்தர்கள் மாலை அணிந்து வந்து
முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் முருகன்
கோவில் பிரகாரங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.
இடிந்து விழுந்த
மண்டபம் : - திருச்செந்தூர் முருகன் கோவில் நீண்ட பிரகாரங்களைக் கொண்டது. வள்ளி குகை
அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் இன்று
காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது.
பக்தர்கள் அச்சம்
பெண் பக்தர் கோவிலுக்குள் மரணமடைந்த காரணத்தால் கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள்.
பிரகார மண்டபத்தில் உருள்வலம் வருவது வாடிக்கை. இன்று மண்டபம் இடிந்து விழுந்துள்ளதால்
பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment