Latest Updates News | Hot News | Sports News

01 April 2011

Rajinikanth's Banging Entry into Politics

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குகிறார்!

அரசியலை மையமாக வைத்து ‘நான் எப்போ வருவேன்... எப்படி வருவேன் என யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என படத்தில் வசனம் பேசிய ரஜினிகாந்த் தற்போது அரசியல் களத்தில் குதித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலில் இறங்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கை ஆகும். அதற்கு பதில் தரும்போது ‘நேரம் வரும்போது அது தானா நடக்கும்’ என்று அவரது பாணியில் அப்போதெல்லாம் பதில் அளித்த ரஜினிகாந்த், தற்போது நல்ல முடிவை எடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளனர்.

இப்போதிருக்கும் நிலையில் அரசியலில் இறங்குவது சரி எனப் பட்டது. அதனால் அரசியலில் இறங்குகிறேன் என்றார். விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்க விருப்பதாகவும், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தற்போது ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். “ஆமா இன்னிக்கு ஏப்ரல் 1 தானே..!”

No comments:

Post a Comment