Latest Updates News | Hot News | Sports News

10 January 2011

கைகலப்பில் முடிந்த தயாரிப்பாளர் கூட்டம


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில், தயாரிப்பாளர்களிடையே அடிதடி நிகழ்ந்தது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் சென்னை பிலிம் சேம்பர் தியேட்டரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராம.நாராயணன் தலைமை வகித்தார்.











கடந்த 2010ம் ஆண்டு 145 படங்கள் வெளியிடப்பட்டன. இதில் பத்து படங்கள் மட்டுமே வெற்றியடைந்தது. மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நிறைய தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தது குறித்தும், நஷ்டத்தைத் தவிர்க்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் கூட்டத்தில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தெரிவித்தனர். அப்போது, தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அய்யப்பன் பேசும் போது, 'சுறா', 'வேட்டைக்காரன்', 'தில்லாலங்கடி', 'வெளுத்துக்கட்டு', 'தீராத விளையாட்டு பிள்ளை' உட்பட 26 படங்களை வாங்கி வெளியிட்டதில் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார். குறுக்கிட்டுப் பேசிய தயாரிப்பாளர் முத்துபாரதி, "நான் 'மதுரை பொண்ணு சென்னை பையன்' படத்தைத் தயாரித்து நஷ்டமடைந்தேன். என்னைப் போல பல தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். படத் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து தான் இங்கு பேச வேண்டும், படத்தை வாங்கி வெளியிட்டது குறித்து குறை கூறுகிறீர்கள். நீங்கள் படங்களை வெளியிட்டதற்கும், இந்தக் கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது, என்றார். இதையடுத்து இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அருகிலிருந்த படத் தயாரிப்பாளர்கள் அமைதிப்படுத்த முயன்ற போதும், அய்யப்பன் ஆவேசமடைந்து முத்துபாரதியை அடிக்க பாய்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மற்ற தயாரிப்பாளர்கள் இருவரையும் பிடித்து இழுத்து மேலும் சண்டை தொடராமலிருக்க முத்துபாரதியை வெளியில் அனுப்பினர். வெளியிலும் மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சண்டைக்குப் பிறகு கூட்ட அரங்கிலிருந்து வெளியே வந்த முத்துபாரதி நிருபர்களிடம், கூட்டத்தில் அய்யப்பன் தேவையில்லாமல் குறுக்கிட்டு சில கருத்துக்களைக் கூறியதால், அவருக்கு மறுப்பு தெரிவித்தேன். அவரை விநியோகஸ்தராகத்தான் எனக்குத் தெரியும். தயாரிப்பாளர் என்று தெரியாது. நான் அய்யப்பனுக்கு எதிராகக் கருத்து சொன்னதால் ஆத்திரப்பட்டு அவர் என்னை பாய்ந்து தாக்கியதால் கைகலப்பு ஏற்பட்டது. "திரைப்படக் கலைஞர்களுக்கு பையனூரில் முதல்வர் கருணாநிதி நிலம் வழங்கியது குறித்தும், அதில் உள்ள பிரச்சினைக் குறித்தும் நான் அறிக்கை ஒன்றில், திரைப்படக் கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சரியான முறையில் ஒதுக்கப்படவில்லை. இதுவே எம்.ஜி.ஆர்., இருந்திருந்தால் இலவசமாக அந்த இடத்தைக் கொடுத்திருப்பார் என்றும் தெரிவித்திருந்தேன். தி.மு.க., ஆதரவாளரான அய்யப்பன் இந்த அறிக்கையால் ஏற்பட்ட கோபத்தில் தான், இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி சண்டைக்கு வந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது, என்றார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் லைசென்சை அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 36 வாரங்களுக்கு கண்டிப்பாக, தமிழ் படங்கள் திரையிட வேண்டும். நடிகர், நடிகைகள் அவர்களின் உதவியாளர்களுக்கு அவர்களே சம்பளம் மற்றும் பேட்டா கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர்களை இம்சிக்கக் கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சினிமா அரசியல் ஆகிப்போச்சு.. இனி இப்படிதான் இருக்கும்!!!

No comments:

Post a Comment