சித்திக் இயக்கும் பாடிகார்ட் ரீமேக் படத்தில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார். மலையாள பாடிகார்ட் படத்தின் ரீமேக் தான் இது. மலையாளத்தில் நயன்தாரா நடித்த வேடத்தில் அசின் நடிக்கிறார். ஏற்கெனவே நடித்த வேடம் என்பதால் எப்படி நடிக்க வேண்டும் என்று அசினுக்கு ஏதேனும் ஆலோசனை சொன்னீர்களா? என்று நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது: நடிகைகள் யாருமே இன்னொரு நடிகையிடம் இருந்து ஆலோசனைகள் கேட்பது இல்லை. அதை விரும்பவும் மாட்டார்கள். அசினை பொறுத்தவரை அவர் புதுமுக நடிகை அல்ல. அசினுக்கு இந்த வேடம் சிறப்பாக இருக்கும். அவருக்கென்று தனி ஸ்டைல் இருக்கிறது. தமிழ் திரையுலகில் அசின் மார்க்கெட் வலுவாக இருக்கிறது. அவர் சிறந்த நடிகை. கேரக்டர்களில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு நன்றாக தெரியும் என்று அசினை புகழ்ந்துள்ளார்.
No comments:
Post a Comment