Latest Updates News | Hot News | Sports News

Showing posts with label sex movie. Show all posts
Showing posts with label sex movie. Show all posts

25 April 2011

சினிமா படம் எடுத்து செக்ஸ் லீலை: டாக்டர் வலையில் சிக்கிய நடிகைகள்; ஆபாச படங்கள் அம்பலம்



நெல்லை மேல நத்தத்தில் மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் செல்வராஜ். இவரது ஆஸ்பத்திரியில் 2 பேர் நர்சாக பணிபுரிந்தனர். நர்சுகளிடம் செல்வராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.   இதையடுத்து நெல்லை போலீசார் டாக்டர் செல்வராஜை கைது செய்தனர்.
அவரிடமும் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சுகளிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. நர்சிங் படித்து வேலை இல்லாமல் இருக்கும் பெண்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது ஆஸ்பத்திரியில் சேர்த்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
நடிகைகளுடனும் செல்வராஜுக்கு தொடர்பு இருந்தது அம்பலமாகி உள்ளது. இவர் “என் உள்ளம் உன்னைத் தேடுதே” என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி செல்வராஜே இயக்கியுள்ளார். இதற்கு தணிக்கை குழு “ஏ” சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்துக்கான படப்பிடிப்பை குமரி மாவட்டத்தில் நடத்தி உள்ளார்.
சொத்தவிளை பீச்சில் நடிகையுடன் ஆபாச குளியல் காட்சிகளில் நடித்த படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றை போலீசார் கைப்பற்றி நடிகைகளுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரிக்கின்றனர். சென்னையில் முகாமிட்டு பல நடிகைகளுடன் பட வாய்ப்பு தருவதாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. அந்த நடிகைகள் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர். நடிகைகளை வைத்து ஆபாச படம் எடுத்தாரா என்றும் விசாரணை நடக்கிறது.