Latest Updates News | Hot News | Sports News

Showing posts with label beauty trisha. Show all posts
Showing posts with label beauty trisha. Show all posts

08 March 2011

அடுத்த வதந்தி சர்ர்ர்ர்ர்... கண்டு கொள்ளாத த்ரிஷா!

ஒரே இடத்திலேயே கொத்திக் கொண்டு இருந்தால், ஒன்று அம்மி பள்ளமாகணும். இல்லைன்னா உளி தேய்ஞ்சு போகணும்! Trishaத்ரிஷா விஷயத்தில் இரண்டுமே நடக்கவில்லை. முதலில் த்ரிஷாவுக்கு ரகசியமாக குழந்தை பிறந்தது என்று செய்திகள் பரவின. அதை கடும் கோபத்தோடு மறுத்தார்கள் த்ரிஷாவும் அவரது மம்மியும். இவர்கள் மறுத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் த்ரிஷாவுக்கு ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மற்றொரு வதந்தி.

அட... இதென்ன கிசுகிசு ரிவர்சில் போய் கொண்டிருக்கிறதே என்று தடுமாறிக் கொண்டிருக்கிறான் அப்பாவி ரசிகன். இந்த கிசுகிசு எப்படி பரவியதாம்? விசாரித்தால் ஐதராபாத்திலிருந்துதான் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

விவல் சோப் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் த்ரிஷா. இந்த சோப்பு கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றிருக்கிறார். இந்த வதந்தி ஆந்திரா முழுக்க பரவிக்கிடக்கிற இந்த நேரத்தில் கூட அவர் அங்குதான் இருக்கிறார். இருந்தாலும் பிரஸ்சை சந்தித்து விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் மம்மி.

07 June 2010

When is Trisha Marriage ?

த்ரிஷாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு அவரது தாயார் உமா பதில் அளித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே விளம்பரப் படங்கள் மூலம் நடிப்புத் துறைக்குள் நுழைந்த த்ரிஷா, மிஸ் சென்னை பட்டத்தை வென்றதும் மவுனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதலில் ஒப்பந்தமானது லேசா லேசா படம் என்றாலும் அந்த படம் நான்காவது படமாகத்தான் ரீலிஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கும் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது கண்டிப்பாக சொல்கிறேன், என்றார்.

தனது பெற்றோர் தன் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து கூறிய த்ரிஷா, எனக்கு அப்பா - அம்மா என்றால் உயிர். எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர். எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது. வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவின் அம்மா உமா கூறுகையில், என் மகளை செல்லமாக வளர்த்து வருகிறோம். அவருக்கு பிடித்தவரை அவர் மணந்து கொள்ளலாம். த்ரிஷாவை கண்ணின் இமை போல பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வர வேண்டு என எதிர்பார்க்கிறோம், என்று கூறினார்.