Latest Updates News | Hot News | Sports News

29 March 2012

அரைகுறை ஆடையுடன் மாஜி நாயகி ஸ்ரீதேவி

பொதுவிழாக்களில் அரைகுறை ஆடையுடன் மாஜி நாயகி ஸ்ரீதேவி தோன்றுவதற்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1970-80களில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த பின்னர் மும்பையில் செட்டிலான ஸ்ரீதேவி இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் ‌காட்டி வருகிறார். இம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் ‌கவர்ச்சியாக வரத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட ஸ்ரீதேவி கவர்ச்சியாக வந்துள்ளார். இதற்கு அங்குள்ள மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று ஆடை அணிந்து வருவதை அவர் தவிர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.